Thursday, 3 November 2011

மிரட்டும் சண்டை - வேலாயுதமா ? ஏழாம் அறிவா ?



நம்மில் நிறைய சண்டை பிரியர்கள் உண்டு; படம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இவர்களுக்கெல்லாம் சக்க போடு போடற மாதிரி சண்டை காட்சிகள் வேண்டும். இனியொரு விஷயம் மீடியா ஆதிக்கம் கொண்டுள்ள தற்போதைய சூழலில் பாடலுக்காக மீண்டும் மீண்டும் பார்க்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் குறைந்து விட்டார்கள். ஆனால் இன்றைய தேதியில் படத்தை தியேட்டரில் சென்று திரும்ப  பார்க்கும் கூட்டம் உண்டென்றால் அது சண்டை காட்சி பார்க்கும் கூட்டம் மற்றுமே!! அதனால் தான் ஆச்ஷன் படங்கள் மினிமம் கேரண்டீ படங்களாக உள்ளன.
ஒரு சூப்பர் சண்டைக்காட்சி எப்படி இருக்க வேண்டும் ??

சண்டை காட்சி அமைப்பதில் இரண்டு வகை உண்டு .. 
1  .மிக பிரமாண்டமாக காட்சி அமைப்பில் சண்டை வைப்பது.
2  .காட்சியோடு வைத்து உணர்ச்சி பூர்வமாக சண்டை வைப்பது.

பிரமாண்ட சண்டை காட்சிகள் என்றால் அன்றைக்கு விஜயகாந்த், இன்றைக்கு ஷங்கர். 

இவை இரண்டையும் விளக்குவதென்றால்:
ஒரு பீப்பாய் உருளும் காட்சியை எப்படி பிரமாண்டமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் அமைக்கலாம் என எங்கோ படித்தது..


மிகப்பெரிய மலை அருவி, டாப் ஆங்கில் வியு - ஹெலிஹாப்டர் பறக்கிறது - சீறிப்பாயும் அருவி நீரில் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்படுகிறது 10  அடி பீப்பாய்.  இது பிரமாண்டம்.

ஒரு பீப்பாய் அதன் வாய் திறக்கப் படுகிறது, ஒரு பச்சிளம் குழந்தை உள்ளே வைத்து மூடப்படுகிறது.
அடுத்த காட்சி, பீப்பாய் மாடிபடிகளிலிருந்து உருண்டோடி வருகிறது.. ஒவ்வொரு படியாக விழுந்து, கடைசி படியில் இடித்து அதன் மூடி உடைகிறது.. 
பீப்பாயின் உள்ளே கேமரா அப்படியே செல்கிறது. - இப்போ ரசிகனின் மூச்சு எப்படி இருக்கும்?? - இது உணர்ச்சி பூர்வமான காட்சி. 


இப்போ நம்ம வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு - படத்தின் சண்டை எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.

ஏழாம் அறிவு - 

மூன்று சண்டைகள் - முதல் காட்சியில் வரும் போதி தர்மர் சண்டை உணர்வுபூர்வமாக வரவேண்டிய அருமையான இடம், ஆனால் போதி தர்மரின் திறமையை காட்டவேண்டி இருந்ததாலும், குறைந்த நேரம் என்பதாலும் - மனதில் ஒட்டவில்லை 
டாங்கர் லாரி சண்டை - ரொம்ப சூப்பர் - அதிலும் இடையிடையே சூர்யா ஆச்சிரியத்தையும், இயலாமையும் ஒரு சேர காட்டி நடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனா நோக்கு வர்மம் - மம்மி ஸ்டைலில் இருந்தது பின்னடைவு, துப்பரவு தொழிலாளி சண்டை போடும் இடம், அதிர்ச்சிக்கு பதில் .. சிரிப்புதான் வந்தது .
கிளைமாக்ஸ் சண்டை - எப்ப சூர்யா திருப்பி அடிப்பார்னு இரசிகன காக்க வச்சது, முதல் அடி திருப்பி அடிக்கும் போது நம்மள அறியாமலே சொல்லுவோம் - " அடிடா அவன.. கொய்யால" - சூப்பர்  

வேலாயுதம் - 4 சண்டைகள் 

முதல் இரண்டு சண்டைகளும் - காமெடி கலந்த ஸ்டைல்;
பஞ்ச் சோட ஆரம்பிக்கும் முதல் சண்டை - சின்னதா இருந்தாலும் நைஸ்.
 
ரெண்டாவது சண்டை - காமெடி கலந்த ஸ்டைல் தான், பிற்பாதியில் ரெண்டு பெரிய சண்டை வரதால இப்படி வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். விஜய் வேலாயுதம் டிரஸ் ரீச் ஆகவேண்டிய சீன்- நல்லாவே இருந்தது.

ரயில் சண்டை - ரொம்ப ரொம்ப சூப்பரா வந்திருக்க வேண்டிய சண்டை, திருமூர்த்தி, செந்தூர பூவே  படங்கள்ல விஜயகாந்த் பண்ணியிருப்பார், அதையாவது ரபெரன்ஸ் வச்சு எடுத்திருக்கலாம்.  ரொம்ப மொக்கையவே இருந்துச்சி, அதிலும் ஹாட் பீக் ல சண்ட போட்டிடிருக்கும் போது அந்த பஞ்ச் டயலாக் சுத்தமா பொருந்தல. (சுத்தமா கேட்கல ) -பிரமாண்டம் வீணடிக்கப்பட்டது.

கிளைமாக்ஸ் சண்டை - விஜய கட்டி போட்டுட்டு, தங்கச்சி குரல் கேட்டதும் உணர்ச்சி பொங்கறது ரொம்ப சூப்பரா மேட்ச் ஆகியிருந்தது, முந்தன சீன்ல தங்கச்சிக்கு வெடிகுண்டு வச்சவன முறைச்சு பாத்து, அடிச்சு கொல்லுற சீன் சூப்பர். (நல்ல வேல இங்க பஞ்ச் வைக்கல). விஜய் வெத்து உடம்போட நின்னாலும், பிரமாண்டத்துக்கு மேல் உணர்ச்சி பூர்வமாகவே இருந்தது பிளஸ்.

சண்டைக்கு என்னோட சாய்ஸ் - "ஏழாம் அறிவு "









ஒரு A ஜோக்!!

ஒரு சின்ன பையன், அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது, அதாவது அவன் தூங்கும் போது எப்பவும் அவன் அவங்க அம்மா தொப்புள்ள ஆட்காட்டி விரல வச்சி படுக்கிறது வழக்கம்.

ஒருநாள் அவங்க அம்மா வேல விஷயமா வெளியூர் போகவேண்டி இருந்ததால பையன பக்கத்து வீட்டுல விட்டுட்டு போக முடிவுசெஞ்சாங்க.

பக்கத்துக்கு வீட்டுல விட்டுட்டு, சொன்னாங்க," சேச்சி, பையன் கிட்ட ஒரு பழக்கம், தூங்கும் போது என் தொப்புள்ள விரல் வச்சி படுப்பான், தெரியாம    உங்கமேல வச்சிட்டான்னா எடுத்துவிட்டுங்க ப்ளீஸ் "
" சின்ன பையன் தான, நான் பாத்துகிறேன்; நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க " - சேச்சி 

அன்று இரவு..

இரவில் திடுக்கென்று முழித்த சேச்சி .. மெல்லிய குரலில் " டேய் தம்பி.. நீ விரல் வச்சிருக்கிறது என் தொப்புள் இல்லப்பா "

பையன் சொன்னான் " தெரியும் ஆண்டி, நான் வச்சிருக்கிறதும் என் விரல் இல்ல "

####$$$@@@ ?????????

Wednesday, 2 November 2011

A R முருகதாஸ் - சரக்கு தீர்ந்து விட்டதா ?

சில இயக்குனர்களின் அறிமுக படங்கள் தாம் தூம் என வெற்றி பெரும், அவர்களின் அடத்தடுத்த படங்களும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவரும். ஆனால் கிடைத்த வெற்றியை தக்கவைத்து தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருப்பவர்கள் ஒரு சிலரே..

ஒரு சில வெற்றிகளுடன் சரக்கு தீர்த்து விட்ட சில இயக்குனர்கள் பற்றி காண்போம் :

1 . சேரன் - இந்த வரிசையில் நான் முதலாவதாக வைக்க ஆசைப்படும் இயக்குனர். இவரின் கடைசி வெற்றிப்படம் ஆட்டோக்ராப்; அந்த படம் வெளி வந்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று என்றே மறந்து விட்டது. ஏனோ இன்னும் இவர் முன்னணி இயக்குனர் பட்டியலில் உள்ளார் ?? இவர் நடிப்புப் பற்றி சொல்ல வேண்டுமே... யப்பா .. நண்பர் ஒருவர் சொன்னார் இப்படி," சிவாஜி சில படங்களில் OVER ACTING செய்திருப்பார்..ஆனால் இந்த சேரன் யதார்த்தமாக நடிகிறேன்ன்னு என்னமோ பண்ணரார்ப்பா.. எனக்கு அது என்ன ஆக்டிங் ன்னு சொல்ல தெரில ".. 

2 . S J சூர்யா - வாலி, குஷி ன்னு அஜித் விஜய் வைச்சு சூப்பர் ஹிட் குடுத்தவர்.. அப்புறம் அவரே அவர் இயக்கத்துல நடிச்சி அ.. ஆ .. ன்னு அவருக்கு அவரே ஆப்பு வச்சுக்கிட்டார்.. இப்போ நண்பன் ல நடிக்கிறாராமா... இயக்கம் மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்.

3 . பேரரசு - விஜயின் ஆஸ்த்தான இயக்குனராக இருந்தார்.. இவர் இருந்த பீக்க பார்த்து தமிழ்நாட்டுல இருக்குற ஊர் பத்தாது, ஆந்திரா - கேரளா ஊர் பேர்களைஎல்லாம் வச்சு படம் எடுப்பார் ன்னு நினச்சாங்க .. இப்போ காலி டப்பா.

4 . ரமணா - திருமலை படம் முலம் தளபதிக்கே திருப்பம் தந்தவர். சுள்ளான் ன்னு ஒரு படம் டைரக்ட் பண்ணி காணாமல் போனவர்.

5 . மகாராஜன் - விஜயகாந்த் மார்க்கெட் டல் அடிச்சிட்டு இருந்த நேரம் வல்லரசுன்னு ஹிட் படம் குடுத்து விஜயகாந்த் - வானத்த போல , வாஞ்சிநாதன், வல்லரசுன்னு - வ வரிசை ஹாட் ட்ரிக் அடிக்க வச்சார்.. ஆனா அடுத்து அஜித் படம் ஒண்ணு டைரக்ட் பண்ணார்.. ஆஞ்சநேயா ன்னு நினைக்கிறன் - ஆளு அவுட்.

6 .  எழில் - துள்ளாத மனமும் துள்ளும் என்ற சூப்பர் டுப்பர் ஹிட் குடுத்தவர் , அதை அடுத்து அஜித் வைத்து ஒரு நார்மல் படம் .. ஒரு மொக்க படம் .. 

7 . சுப்ரமணிய சிவா - திருடா திருடி 

8 .  கொஞ்சம் பழைய லிஸ்ட் இல் - வசந்த் மற்றும்  கதிர் 

மதில் மேல் பூனை போல் இருப்பவர்கள் - கொஞ்சம் அசந்தாலும் காலி பெருங்காய டப்பா லிஸ்ட் -இல் சேர வாய்ப்புள்ள இயக்குனர்கள் :

1 . மிக்ஷின் 
2 . லிங்கு சாமி 
3 . தரணி 

இப்பவும் எப்பவும் நம்பிக்கை உள்ள இயக்குனர்கள்:

1  மணி ரத்னம் 
2  ஷங்கர் 
3  A R முருகதாஸ்
4  கௌதம் வாசுதேவ்
5  பாலா
6  அமீர்

வெற்றிமாறன் , வெங்கட் பிரபு, KV ஆனந்த் - தனி லிஸ்ட் ;  இவங்களோட வெரைட்டி இவங்களுக்கு தனி இடம் குடுக்க சொல்லுது..

தலைப்புக்கு பதில் -     A R முருகதாஸ் சரக்கு இன்னும் அப்படியே உள்ளது, அவர் மீண்டு வருவார் , தளபதியுடன் கூடும் படம் கண்டிப்பாக வெற்றிப் பெரும்.


ஆசாத் முதல் வேலாயுதம் வரை !!

நரசிம்மா படம் ரிலீஸ் ஆனா சமயம், நான் விருதுநகரில் இருந்தேன் , என்னுடைய பெரியம்மா பையன் சிவகங்கையில் BE படித்துக்கொண்டிருந்தான்; அவனுடன் ஹாஸ்டலில் தங்கி ஆந்திராவை சேர்த்த சில மாணவர்களும் படித்துகொண்டிருந்ததால், அவன் தெலுங்கு படங்களை பற்றியும் பேசுவான்.

நரசிம்மா  இயக்குனர் திருப்பதி சாமி படம் ரிலீஸ் ஆகும்முன்னே இறந்து விட, அப்போதைக்கு அது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது. அந்நேரத்தில் அவன் திருப்பதி சாமி பற்றி சொன்னான், " டேய் இந்த டைரக்டர் தான் தெலுங்குல ஆசாத் னு ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கனாம், ஸ்டோரி பசங்க சொன்னாங்க ரொம்ப நல்லா இருக்கு".

அதுக்கப்புறம் நாங்க ரொம்ப தடவ இந்த ஸ்டோரி லைன்ன பத்தி டிஸ்கஸ் பண்ணியிருக்கோம், அவன் சென்னைல  வேலை வாங்கி செட்டில் ஆனா அப்புறம் எப்பவாவது அவனப்  பார்க்க போனா கூட நாங்க இந்த படத்த பத்தி பேசிக்கிட்டு இருந்திருக்கோம்.

தமிழ் ல ரீமேக் பண்ணினா யாருக்கு சூட் ஆகும், ஏன் ஸ்டோரி நல்லா இருந்தும் இன்னும் யாரும் ரீமேக் பண்ணலன்னு பேசிட்டு இருப்போம்.

வேலாயுதம் - ஆசாத் தழுவல் னு அறிவிப்பு வந்ததுல இருந்து ஒரு எதிர்பார்ப்பு, கண்டிப்பா பார்க்கனும்னு.

மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கெல்லாம் 10 வருட எதிர்பார்ப்பு - (ஆனால் அதையும் மீறி ஏழாம் அறிவு தான் முதலில் பார்த்தேன் ???)


அப்பாடா - படம் பார்த்துட்டேன் ..

படம் ??

இப்ப தா தெரியுது ஏன் இந்த படத்த யாரும் ரீமேக் பண்ண முயற்சி செய்யலன்னு .. (கேட்க நல்லா இருக்குற கதை எடுக்க கஷ்டம் போல )

விஜய் கு பதில் வேறு யாரவது நடித்திருந்தால் வேற கலர் கிடைச்சிருக்குமோ ??
ஆறு முழுதும் தண்ணி ஒடனாலும் நாய் நக்கி தான் தண்ணி குடிக்குமாம், எப்படி பட்ட  ஸ்டோரி லைன் கிடைச்சாலும் விஜய் இப்படி தான் நடிப்பாரா ??

இந்த படம் எப்படி விண்ணை கிழிக்கும் வெற்றி னு சொல்லுறாங்கன்னு தெரியல ? ஆட்சி மாற்றம் காரணமோ ??

எல்லா பிளாக்கர் சும் படத்த பத்தி பாசிடிவாவே சொல்லியிருக்காங்க ?? ஏன் ஏழாம் அறிவு கடுப்ப இப்படி காட்டஈட்டாங்களோ?
என் அளவில் - வேட்டைகாரனை விட வேலாயுதம் ஒன்றும் BETTER படம் இல்ல.

ஒருசில படங்கள் ரொம்ப நல்லா ஓடும் ஆனா எனக்கு பிடிச்சதில்லை ( டிஷ்யூம் , சாமி , சிங்கம் ),  சில படங்கள் ஓடாது ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும் ( இதய திருடன், சாது மிரண்டா, வேட்டைக்காரன்) - வேலாயுதமும் அப்படியோ ??

90 கடைசியில வந்த ஒரு படத்த 80 கடைசியில வந்த படத்தோட சாயல்ல கொடுத்திருக்கார் டைரக்டர் ராஜா !!! (கிராமத்து ஹன்சிஹா மாடர்ன் ட்ரெஸ் மாட்டிகிட்டு வர்றது, கிழக்குகரை படத்துல குஷ்பு வந்தத ஞாபக படுத்துது)