Sunday, 18 September 2011

கிரிக்கெட், சினிமா மற்றும் அரசியல்

கிரிக்கெட், சினிமா மற்றும் அரசியல் இது மூணும் நம்ம எல்லாரையும் கட்டிப்போட்டு வச்சிருக்கு.. நாம என்ன பண்ணிட்டு இருக்கோம், நம்ம பசங்க என்ன பண்ணறாங்க அப்படிங்கறத கூட சில சமயம் மறந்துருவாங்க.. ஆனா கிரிக்கெட், சினிமா, அரசியல் இதோட UPDATE இல்லாம மட்டும் நம்மளால இருக்க முடியாது.

அரசியல் வாழ்க்கையோட இனஞ்ச ஒரு விஷயம்.. ஆனா சினிமாவும், கிரிக்கெட்டும் அரசியலோட இனஞ்ச விஷயம்.

ஒரு பக்கம் கிரிக்கெட் (பிசிசிஐ) அரசாங்கத்துக்கு கட்டுப்படமாட்டேன்னு அடம்பிடிக்குது, இன்னொரு பக்கம் சினிமா அரசியல கட்டிபிடிக்கனும்னு  அடம் பிடிக்குது.

எனக்கு என்னமோ கிரிக்கெட்ட விட சினிமாதாங்க பிடிச்சிருக்கு. சும்மா ஓசியில நம்ம வீடுக்குள்ள கிரிக்கெட் காட்டினாலும், காசு குடுத்து சினிமா பார்த்து அதப்பத்தி பேசி தீரலைனா துக்கம் வராது போங்க. காலேஜ் படிக்கும் போது கவண்டமணி ஜோக் அடிச்சி பசங்ககுள்ள சிரிச்சிகிட்டு இருந்தோம்; இப்போ கவுண்டமணி காமெடிய சந்தானம் சினிமாவுல அடிக்க, அத நாம வெளிய அடிக்க அப்படியே வண்டி போயிட்டிருக்கு.

சினிமா மக்களை கெடுக்குதுன்னு சொல்றாங்க - சினிமா தவற, வேற எந்த ஒரு மாத்து மருந்தால நம்மாளுகளுக்கு சினிமா மாதிரி ENTERTAINMENT கொடுக்க முடியும் சொல்லுங்க?? வருஷத்துல ஒரு மாசம் லீவு போட்டு நாடு நாடா நம்மளால சுத்த முடியுமா?? இல்ல வார கடைசியில ஊருவூராவாவது சுத்த முடியுமா ?? இந்தியாவுக்கு வேணுமுனா வடக்கு காஷ்மீரா இருக்கலாம்.. ஆனா தமிழன் , சென்னைய தாண்டி யோசன கூட பண்ணத்தெரியாது !! நம்ம எங்க ஊருவூரா போயி என்ஜாய் பண்ணறது??

நம்மெல்லாம் ஒரே என்ஜாய் சினிமாதா.. வெள்ளிகிழமை சாயங்காலமானா விபூதி போட்டுட்டு கோயிலுக்கு போன காலம் போயி, சரக்க போட்டுட்டு தியேட்டருக்கு போற காலம் இது.

அப்ப சனி, ஞாயிறு ? - சனி சில நாள் மறு குடி .. ஞாயிறு ONE AND ONLY கிரிக்கெட் .. விளையாடுரதுங்க>>> பாக்கறது இல்ல !!!

என்சாய்!!!

Tuesday, 13 September 2011

ஜெயிக்கும் குதிரை

வாரணம் ஆயிரம் - சூர்யா / கௌதம்
கஜினி - சூர்யா / முருகதாஸ்
அந்நியன் - விக்ரம் / ஷங்கர் 
சிவாஜி - ரஜினி / ஷங்கர்
எந்திரன் - ரஜினி  / ஷங்கர்
பில்லா - அஜித் / விஷ்ணு
விண்ணை தாண்டி வருவாயா - சிம்பு / கௌதம்
காவலன் - விஜய் / சித்திக்  
மங்காத்தா - அஜித் / வெங்கட்  
ஏழாம் அறிவு - சூர்யா / முருகதாஸ்
வேலாயுதம் - விஜய் / ராஜா
நண்பன் - விஜய் / ஷங்கர்

மேற்கண்ட படங்களில் யார் சம்பளம் அதிகமாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்? நடிகருக்கா ?? அல்லது இயக்குனருக்கா ??

இரண்டு குதிரைகளில் எந்த குதிரைக்கு அதிக பணம் கட்டப்படுகிறதோ, அதுதான் ஜெயிக்கும் குதிரை !!

அப்போ நடிகர்களில் ஜெயிக்கும் குதிரை யார் ? கூட ஓடும் துணை குதிரை யார் ??