திரைக்கதை எப்படி இருக்க
வேண்டும் என்ற கேள்விக்கு பாக்யாவில் படித்ததாக ஞாபகம் .கதையில் ஒரு
முக்கியமான சஸ்பென்ஸ் அல்லது திரை முடிச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதன்
அடிப்படையில்
திரைக்கதை யுக்தி 1 :
திரையில்
வரும் கதாப்பாத்திரம் (ஹீரோ / ஹீரோயின்) அந்த சஸ்பென்ஸ் பற்றி தெரிந்தவராக
இருப்பார், ஆனால் படம் பார்க்கும் ரசிகனுக்கு அது பற்றி எதுவும்
தெரியாது.. முடிச்சு அவிழும் போது ரசிகன் பரவசப்படுவான்.. (உ-ம் -
பாட்சாவில் மாணிக்கம் - பாட்சா இடையேயான முடிச்சு)
திரைக்கதை யுக்தி 2 :
படம் பார்க்கும் ரசிகனுக்கு
ரகசியம் அல்லது விஷயம் தெரியும், ஆனால் கதாபாத்திரம் அப்பாவியாக
இருக்கும்.. (உ- ம் - அமைதிப்படை அமாவாசை தாயம்மா) அப்பாவி பெண்ணுக்காக
படம் பார்க்கும் ரசிகன் பரிதாபப் படுவான், அச்சோ அச்சோ என அலறுவான்.
இது இரண்டும் தான் ஒவ்வொரு படத்தின் திரைக்கதை தடத்தின் முக்கிய இடம் .. இங்கே சொதப்பினால் அவ்வளவுதான்!!!
இப்போது முருகதாஸ் ஏழாம் அறிவில் எப்படி சொதப்பியுள்ளார் என பார்ப்போம்!!
ஏழாம் அறிவில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள் - போதி தர்மர், சுபா, அரவிந்த் மற்றும் டான்கிலி (மற்றவை SUPPORT கதாப்பாத்திரங்கள்)
திரைக்கதை யுக்தி 1 படி, இங்கு போதி தர்மர் - அரவிந்த் இருவரும்
எப்படி தொடர்புடையவர்கள் என்பதே திரை முடிச்சு. முருகதாஸ் படம் வரும்
முன்னே கூறியது போல- இருவரையும் இணைப்பது சுபா; அரவிந்த் அல்லது போதி
தர்மர் அல்லது சுபா - இவர்களின் எதிரி டான்கிலி. இதுதான் இயக்குனரின் தடம்,
இவர்களை எங்கே எப்படி இணைப்பது என்பதே திரைக்கதையில் முக்கியம்.
முருகதாஸ் சறுக்கல்ஸ் :
1 . படம் தொடங்கும் போதே போதி
தர்மன் யார் என விலாவரியாக குறைந்தது 15 நிமிடங்கள் காட்டி விடுகிறார்,
பிறகு வரும் காட்சிகளில் படம் பார்க்கும் ரசிகனுக்கு போதி தர்மர் யார்
என்பதை மனதில் பதிந்ததாக வைத்தே திரைக்கதை அமைய வேண்டும்.. ஆனால்
அரவிந்திடம் சுபா (அரசு அருங்காட்சியகத்தில்) போதி தர்மனை பற்றி விளக்குவது
, ஆடியன்சை பொறுத்தவரை ரிப்பிட் சீன்.. மேலும் விளக்கும் வசனங்களும்
ரிப்பிட்டு.
2 . கஜினி - சஞ்சய் ராமசாமி / மொட்டை சூர்யா , நயன்தாரா : ஏழாம் அறிவு - போதி வர்மன் / அரவிந்த் , சுபா
கஜினியில் நயன்தாராவின் ஆராச்சியில் தொடங்கும் படம், மொட்டை சூர்யா - சஞ்சய் ராமசாமி யார் என சிறிது சிறிதாக ரசிகன் உணர்வான்.
ஏழாம் அறிவில் சுபாவின்
ஆராய்ச்சியில் தொடங்கி அந்த அரசு அருங்காட்சியகத்தில் போதி தர்மனை பற்றி
விளக்குவதே சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அப்படி
செய்திருந்தால் கஜினி சாயல் வந்திருக்கும் என எண்ணினாரோ என்னவோ முதல்
பாதியில் கேரக்டர் லான்ச்சிங் சுத்தமாக சரியில்லை. ஏழாம் அறிவில் ரெண்டு
சூர்யா ஒருவரை காட்டி விட்டோம், இன்னொருவர் இப்போ வருவார் என்பது போல்
இருந்தது சூர்யா ENTRY .. சாரி அரவிந்த் ENTRY யாக இருந்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும்.
3 . கஜினியில் நயன்
தாராவுக்கும் சூர்யாவுக்கும் காதல் இல்லை, இங்கே அரவிந்த் - சுபா காதல்
திரைக் கதையின் முட்டுக்கட்டை. காதல் தோல்வி சோகம், காதல் ஜெயிக்க வேண்டும்
என்ற ஏக்கம் - இந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு தூண்ட கதையில் எந்த அவசியமும்
இல்லை. இதற்க்கு பதில் சுபா, போதி தர்மரை பற்றி ஆராய்ச்சி செய்யும்
காட்சிகளை வைத்து, போதி தர்மரை பற்றி மேலும் பல கேரக்டர்களை பேச
வைத்திருந்தால், கிளைமாக்ஸ் காட்சியில் அரவிந்த் போதி தருமராக மாற வேண்டும்
என்ற பரிதவிப்பு ரசிகனுக்குள் பற்றி எரிந்திருக்கும் (ரமணா FORMULA ) ..
missed
4 . முதல் முறையாக போதி
தர்மரை பற்றி சொல்ல முனைவதால், எங்கே மக்கள் ஏற்பார்களோ மாட்டார்களோ என்ற
சந்தேகம் இயக்குனருக்கு வந்திருக்க கூடும்.. அதை ஈடு செய்யும் பொருட்டே
தமிழ், தமிழ் என மொழி உணர்வை கூடவே உலாவ விட்டிருக்கிறார். சம்பந்தமே
இல்லாத இடங்களிலும் தமிழ் உணர்வு வசனங்கள் .. இந்த வசங்களை அகற்றினாலும்
திரைக்கதை பாதிக்கப்பட்டிருக்காது.. அல்லது காதல் காட்சிகள் அகற்றிவிட்டு
தமிழ் உணர்வு காட்சிகளாக்கியிருக்க வேண்டும் .. MISSED
5 . அப்புறம் அரவிந்த்தாக வரும் சூர்யா .. அயன் படத்தில் வரும் சீன் " என் கிளி பஸ்ல போகுதுங்க.. டியுப் லைட், டியுப்
லைட் னு சொல்லிகிட்டே போகுதுங்க ".. அங்க கட் பண்ணி இங்க ஓபன் பண்ணி
இருக்கார்.. அந்த மொபைல் போன் தரும் காட்சியின் தொடர்ச்சியாகவே உள்ளது
அரவிந்த் பெர்பார்மன்ஸ். SAME VOICE MODULATIOn / SAME BODY LANGUAGE.
6 . மற்ற படி நமக்கு BIO TECHNOLOGY
பத்தியும் தெரியாது, குங்க்பு பத்தியும் தெரியாது - அதனால அத சரியா
கையாண்டங்களா னு எனக்கு புரியாது.. திரைக்கதை நல்லா இருந்தா PEN DRIVE தேடி
கூட படம் எடுக்கலாம் (பில்லா) TECHNOLOGY கோவிச்சுக்காது..
7 . நம்ம தாரவி SI கணேஷ் (மங்காத்தா) இந்த
படத்துல நடிச்சிருக்கார், ஏம்பா நீயாவது சொல்லியிருக்க கூடதா?? ஓவர்
கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு. ஒரு விசயத்த சொல்லும் போது ஆடியன்ஸ்
உணர்ச்சி பொங்கரமாதிரி சொல்லணும் , அதுக்காக சொல்லறவங்க உணர்ச்சிவசப்பட்டு
சொல்லனும்னு அவசியம் இல்ல. போதி வர்மர பத்தி விளக்குற ஆரம்ப காட்சி
ஆகட்டும் , மஞ்சள் பத்தி சூர்யா சொல்லுற இறுதி காட்சி ஆகட்டும், ரொம்ப
உணர்ச்சி பொங்க பேசுறாங்க .. ஆனா ஆடியன்ஸ் தேமேன்னு இருக்காங்க ..
ஏழாம் அறிவுக்கு ஏழு போதும்னு நினைக்கிறன் ..
Good Article in a Different Way
ReplyDeleteThanks