Wednesday, 2 November 2011

ஆசாத் முதல் வேலாயுதம் வரை !!

நரசிம்மா படம் ரிலீஸ் ஆனா சமயம், நான் விருதுநகரில் இருந்தேன் , என்னுடைய பெரியம்மா பையன் சிவகங்கையில் BE படித்துக்கொண்டிருந்தான்; அவனுடன் ஹாஸ்டலில் தங்கி ஆந்திராவை சேர்த்த சில மாணவர்களும் படித்துகொண்டிருந்ததால், அவன் தெலுங்கு படங்களை பற்றியும் பேசுவான்.

நரசிம்மா  இயக்குனர் திருப்பதி சாமி படம் ரிலீஸ் ஆகும்முன்னே இறந்து விட, அப்போதைக்கு அது மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது. அந்நேரத்தில் அவன் திருப்பதி சாமி பற்றி சொன்னான், " டேய் இந்த டைரக்டர் தான் தெலுங்குல ஆசாத் னு ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கனாம், ஸ்டோரி பசங்க சொன்னாங்க ரொம்ப நல்லா இருக்கு".

அதுக்கப்புறம் நாங்க ரொம்ப தடவ இந்த ஸ்டோரி லைன்ன பத்தி டிஸ்கஸ் பண்ணியிருக்கோம், அவன் சென்னைல  வேலை வாங்கி செட்டில் ஆனா அப்புறம் எப்பவாவது அவனப்  பார்க்க போனா கூட நாங்க இந்த படத்த பத்தி பேசிக்கிட்டு இருந்திருக்கோம்.

தமிழ் ல ரீமேக் பண்ணினா யாருக்கு சூட் ஆகும், ஏன் ஸ்டோரி நல்லா இருந்தும் இன்னும் யாரும் ரீமேக் பண்ணலன்னு பேசிட்டு இருப்போம்.

வேலாயுதம் - ஆசாத் தழுவல் னு அறிவிப்பு வந்ததுல இருந்து ஒரு எதிர்பார்ப்பு, கண்டிப்பா பார்க்கனும்னு.

மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கெல்லாம் 10 வருட எதிர்பார்ப்பு - (ஆனால் அதையும் மீறி ஏழாம் அறிவு தான் முதலில் பார்த்தேன் ???)


அப்பாடா - படம் பார்த்துட்டேன் ..

படம் ??

இப்ப தா தெரியுது ஏன் இந்த படத்த யாரும் ரீமேக் பண்ண முயற்சி செய்யலன்னு .. (கேட்க நல்லா இருக்குற கதை எடுக்க கஷ்டம் போல )

விஜய் கு பதில் வேறு யாரவது நடித்திருந்தால் வேற கலர் கிடைச்சிருக்குமோ ??
ஆறு முழுதும் தண்ணி ஒடனாலும் நாய் நக்கி தான் தண்ணி குடிக்குமாம், எப்படி பட்ட  ஸ்டோரி லைன் கிடைச்சாலும் விஜய் இப்படி தான் நடிப்பாரா ??

இந்த படம் எப்படி விண்ணை கிழிக்கும் வெற்றி னு சொல்லுறாங்கன்னு தெரியல ? ஆட்சி மாற்றம் காரணமோ ??

எல்லா பிளாக்கர் சும் படத்த பத்தி பாசிடிவாவே சொல்லியிருக்காங்க ?? ஏன் ஏழாம் அறிவு கடுப்ப இப்படி காட்டஈட்டாங்களோ?
என் அளவில் - வேட்டைகாரனை விட வேலாயுதம் ஒன்றும் BETTER படம் இல்ல.

ஒருசில படங்கள் ரொம்ப நல்லா ஓடும் ஆனா எனக்கு பிடிச்சதில்லை ( டிஷ்யூம் , சாமி , சிங்கம் ),  சில படங்கள் ஓடாது ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும் ( இதய திருடன், சாது மிரண்டா, வேட்டைக்காரன்) - வேலாயுதமும் அப்படியோ ??

90 கடைசியில வந்த ஒரு படத்த 80 கடைசியில வந்த படத்தோட சாயல்ல கொடுத்திருக்கார் டைரக்டர் ராஜா !!! (கிராமத்து ஹன்சிஹா மாடர்ன் ட்ரெஸ் மாட்டிகிட்டு வர்றது, கிழக்குகரை படத்துல குஷ்பு வந்தத ஞாபக படுத்துது)
 





காலையில் ஒரு கவிதை !!


 










கற்றது கடலளவு!!

கல்லாதது உன் கண்ணளவு !!


தனுஷ் , சிம்பு - மொக்க பசங்களா? ??? !!!

மங்காத்தா அஜித், படம் துவக்கத்திலிருந்தே தன்னுடன் கடத்தலில் ஈடுபடும் நான்கு பேரையும் மொக்க பசங்க என்றே அழைப்பார். அவர்கள் மேல் எப்போதும் ஒரு UNDER ESTIMATE தான் அவருக்கு, குறிப்பாக பிரேம்ஜி மற்றும் மகத் மீது. செஸ் போர்டு முன் அமர்ந்து நாலு பேரையும் கொல்ல திட்டமிடும் காட்சியில்  கூட இவர்கள் இருவரையும் ரொம்ப மொக்கையாகவே கொல்வது போல் இருக்கும்.

அந்த பூட்டை சுடும் வேளையில் கூட அதே எண்ணம் (இப்ப அலறி அடிச்சிகிட்டு ஓடி வருவானுக பார்).. ஆனால் அவர் மொக்க பசங்க ன்னு UNDER ESTIMATE பண்ணின அந்த ரெண்டு சின்ன பசங்க மொத்த பணத்தையும் அடிச்சிட்டு போயிருவாங்க -- இது மங்காத்தா டா!!

இந்த தீபாவளிக்கு படம் ரிலீஸ்- ல் நடந்ததும் கிட்டத்தட்ட இதே சூழல்தான். . "நான் மாஸ் ஹீரோ ன்னு FORM ஆயிட்டேன் யா .. என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க .. இல்லாட்டி யாரும் மதிக்க மாட்டங்கன்னு" - சிம்பு, வடிவேலு ரேஞ்சுக்கு கெஞ்சியும் - தம்பி நீங்க இன்னும் வளரனும்னு சொல்லி உட்காரவச்சுட்டாங்க.
எல்லா தீபாவளி ரேஸ் லையும் ஜெயிச்ச தனுஸ் நிலைமையும் அப்படிதான், பத்தாதற்கு அவரு கிளாஸ் ஹீரோ நான் மாஸ் ஹீரோ ன்னு சிம்பு பேட்டி வேற. 

மொத்ததுல்ல ரெண்டு பெரும் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களால் பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. 
இப்போ தீபாவளி முடிஞ்சி, அவங்க கட்டம் ஆரம்பமாயிருச்சி.. அவங்க UNDER ESTIMATE செய்யப்பட்ட மொக்க பசங்களான்னு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சி.. 

தீபாவளி முன்பிருந்தே என்னோட சாயிஸ் "மயக்கம் என்ன" தான் - ஆனா வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அறிவாளிகள் ஆயுதம் கொண்டு தாக்கி விட்டார்கள். 

சிம்பு சொல்லற மாதிரி யாரு FIRST ஓடறாங்கன்னு முக்கியமில்லை, யாரு கடைசியா FIRST வராங்க ங்கரதுதான் முக்கியம்.

பார்ப்போம் மொத்த பணத்தை அடிச்ச பிரேம்ஜி, மகத் மாதிரி ஷாக் குடுக்கப்போறாங்களா ன்னு..





ஆல் தி பெஸ்ட் - ஒஸ்தி & மயக்கம் என்ன ??

கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் - ஒரு பார்வை


சென்னையில் பொது மக்களுக்கு இடையுறாக கட்டப்பட்ட கட்டிடங்களை அரசு சீல் வைத்து மூடிவிட்டது; இதே போல எல்லா ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொண்டால் மிக நன்றாக இருக்கும் .
எங்கள் ஊர் கோவையில் சென்ற அரசு வந்த புதிதில் நல்லது செய்கிறேன் பேர்வழி  என்று ஊருக்கு நடுவில் ஒரு ஆம்னி பஸ் ஸ்டாண்டை நிறுவிவிட்டு சென்றுள்ளனர்.
கோவை வந்தவர்களுக்கு தெரியும், காந்திபுரம் கோவையின் இதயம் போன்றது. இங்கு ஏற்கனவே உள்ள அரசு பேருந்துகள் இயங்கும் பஸ் நிலையம்,இட வசதி மற்றும் மாநகரின் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு  - உக்கடம் , சிங்காநல்லூர் மற்றும் மிக சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலை என மூன்று இடங்களில் இயக்கப்பட்டுவருகிறது .

கோவைக்கு TIDEL PARK வந்த பிறகு, கணபதியை அடுத்துள்ள சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றத்தை சார்த்த பகுதிகள் மிக விரைவாக குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. (சென்னை திருவான்மியூர் போல்), மேலும் அரசின் வீட்டு வசதி வாரியம் கணபதியை அடுத்து உள்ள கணபதி மாநகர் பகுதியில் பல ஆயிரக்கணக்கில் வீடுகளை கட்டி விட்டதும், அதை தொடர்ந்து அதன் சுற்று பகுதிகளும் விரிந்து இன்று மிக பெரிய குடியிருப்பு பகுதிகளாகிவிட்டன. கணபதி அடுத்து கோவில்பாளையம் வரை விரிந்துள்ள பகுதிகளில் இருந்து மக்கள் காந்திபுரம் வர ஒரே பாதை தான் உள்ளது அது சக்தி சாலை. மக்கள் நெரிசல் அதிகமாகிவிட்ட தற்போதைய சூழலில் , கணபதியை அடுத்துள்ள பகுதிகளில்இருந்து தினமும் காந்திபுரம் வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை வெகுவாக நாளுக்கு நாள் உயர்த்து கொண்டே வருகிறது.

காந்திபுரம் கணபதியை இணைக்கும் முக்கிய சாலையில், அதுவும் மிக சிறிய அளவிலான இடத்தில் சென்ற அரசு ஆம்னி பேருந்து நிலையத்தை நிறுவி சென்றுள்ளது. அங்கங்கே சிதறி கிடந்த ஆம்னி பஸ்களை இணைத்தது நல்லதே என்றாலும் இந்த இடத்தில் ஆம்னி பஸ் நிலையத்தை நிறுவியதால் தினம் தினம் வாகன நெரிசல் அதிகரித்து, பலமணி நேர முடக்கம் ஏட்படுகிறது.

அன்றாட மக்கள் மட்டும் மின்றி வெளியூர் செல்லும் எல்லா பயணிகளும் சங்கமிக்கும் இடம் என்பதால் , மாலை ஆறு மணிக்கு மேல் அந்த இடத்தை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவர்களை வழியனுப்ப வருபவர்களின் வாகனங்கள் , வாடகை ஆட்டோ , கால் டாக்ஸி என பெரும் திரளான கூட்டத்தை மேலும் நெரிசலை ஏற்ப்படுத்த இங்கு பஸ் நிலையம் உள்ளது காரணமாக உள்ளது.

காந்திபுரம் கிராஸ்- கட் ரோடு,  100 அடி ரோடு மற்றும் DR ராதாகிருஷ்ணன் ரோடு - இவை முன்றும்  PARRAELL ஆக அமையப்பட்ட சாலைகள். இவை முன்றையும்  இணைக்க கிட்டத்தட்ட 10 குறுக்கு வீதிகள் உள்ளனன. இதனஊடே சென்று வருவதென்பது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தது அன்று.
ஆனால் இன்றோ வாகன நெரிசலை நேர்ப்படுத்துவதர்க்காக இருக்கும் எல்லா இணைப்புகளையும் முடிவிட்டார்கள். பத்தாதற்கு ஏகப்பட்ட NO ENTRY , ONE WAY .

எப்படி இங்கு பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்தார்கள் என்றே தெரியவில்லை.

மேலே குறிப்பிட்டதுப்போல், இந்த இடம் ஒன்றும் அவ்வளவு விசாலமான இடமில்லை; இன்றும் பல ஆம்னி பஸ்கள் காந்திபுரம் அரசு விரைவு பேருந்து அருகிலேயே செயல் பட்டு வருகிறது. அரசு விரைவு பேருந்து நிலையத்தை நோக்கி செல்வோரை கை பிடித்து இழுக்காத குறையாக கூவி கூவி அழைப்பதை இன்றும் பார்க்கலாம். இப்படி முழுமையா ஆம்னி பஸ்களுக்கும் பலன் அளிப்பதில்லை இந்த பஸ் நிலையம்.

மேலும் கோவையிலிருந்து சென்னை, பெங்களூர்,மற்றும் கேரளாவிற்கு மட்டுமே பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன, மற்றும் சில பஸ்கள் மதுரையை தாண்டி செல்கின்றன.

சென்னை, பெங்களூர் செல்லும் பஸ்கள் - ஈரோடு மார்கமாகவும் , கேரளா செல்லும் பஸ்கள் பாலக்காடு மார்கமாகவும் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பொள்ளாச்சி அல்லது தாராபுரம் மார்கமாகவும் இயக்கப்படுகின்றன.

ஈரோடு மற்றும் தாராபுரம் மார்கமாக செல்லும் எல்லா பஸ்களையும் சிங்காநல்லூர் அல்லது கொடிசியா வளாகம் - இங்கிருத்து இயக்க செய்யலாம்.

பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு மார்கமாக செல்லும் பஸ்கள், சுங்கம் - உக்கடம் பை பாஸ் சாலை அருகே இருந்து செல்லுமாறு திட்டமிடலாம்.

எல்லா ஊர்களிலும், நகரின் வாகன நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் பேருந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட, கோவையில் மட்டுமே வாகன நெரிசலை உருவாக்கும் விதமாக இந்த ஆம்னி பேருந்து நிலையம் செயல் பட்டு வருகிறது.

இந்த எல்லா சிக்கல்களையும் தீர்க்க ஒரே வழி .. பஸ் ஸ்டாண்டை இங்கிருந்து மாற்றுவதுதான் .

கவனிப்பார்களா?





Tuesday, 1 November 2011

ஒரே கதையில் சூர்யா விஜய்

சில பல வருடங்களுக்கு முன், சூர்யா சினிமாவில் அடி எடுத்துவைத்த நேரம், விஜய் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலம்.. இருவரும் ஒரே வேளையில் தங்கள் படங்களை வெளியிட்டனர்..

அப்படங்கள் - மின்சார கண்ணா மற்றும் பூவெல்லாம் கேட்டுப்பார் ..
இரண்டு படங்களின் கதை சாயலும் ஒன்றே.. ஒரே கதை .. இரண்டு திரைக்கதை..

இப்போ இந்த தீபாவளி .. வளர்ந்த சூர்யா , மாஸ் விஜய் .. இரண்டு படம் ..

ஏழாம் அறிவு - வேலாயுதம் ..

மறுபடியும் ஒரு வீடு இரு வாசல் ..

விஜய் வேலாயுதமாக மாறி தீவிரவாதிகளை அழிக்கிறார், ஜெனிலியா உதவியுடன். SUPER HERO வேலாயுதம் ஜெனிலியாவின் கற்பனை பாத்திரம், கிராமத்து வேலுவினால் பின்னப்படுகிறது.

அரவிந்த் போதி தர்மராக மாறி சீனாகாரனை அழிக்கிறார், சுபா உதவியுடன். முன்னோர் போதி SUPER HERO , அரவிந்த் சாதாரண மனிதன்.

ஒரு கதை இரு திரைக்கதை.