Friday, 4 November 2011

பால் வாங்க போயிருந்தேன் !! - அனுபவ சிறுகதை

கொட்டித்  தீர்த்திருந்தது  மழை, நான் ஊர் இறங்கிய நேரம்!! நல்ல வேலை பெரிதாக மழை தொடராமல் இருந்ததால் வீட்டிற்கு நடந்தே போக முடிவு செய்தேன்!! 

வெளியே நல்ல மழை பெய்தாலும் பேருந்துனுள்ளே நீண்ட நேரம் இருந்ததால் தாகமாக இருந்தது; இது மாதிரியான சந்தர்ப்பங்களில் சில்லென்று COKE குடிப்பது வாடிக்கை; ஆனாலும் என்னவோ காபி குடிக்கலாம்  என்று தோன்றியது!! கையில் 500 ரூபாய் நோட்டு போக சில்லறை சரியாக  7 ருபாய்  இருந்தது, காபி எப்படியும் 13  ருபாய் இருக்கும்,500 ரூபாய்யாக  அப்படியே வைத்துஇருந்தால் யோசித்து செலவு செய்வோம்; சில்லறை முறித்தால் உடனே செலவு செய்து விடுவோம். 5 நிமிட நடை விட்டிற்கே போய் காபி குடிப்போம் என்று முடிவு செய்து வீட்டை நோக்கி நடந்தேன்.

"நாளைக்கு தான் வருவேன் ன்னு நினச்சேன்- இணைக்கே வந்துட்ட" - செருப்பை கழட்டும் போதே கேட்டார் அம்மா. "நாளைக்கு நைட் கேரளா போகணும், டிக்கெட் வேற புக் பண்ணலை, அதா இங்கிருந்து கிளம்பினா சௌரியம்னு வந்துட்டேன்", அவசர அவரசரமாக சொல்லி முடித்துவிட்டு தொடர்ந்தேன்," பால் இருந்தா காபி போட்டு குடும்மா !! "

"இப்பதா இருந்த பால பிரையஊத்தி வச்சேன், இரு அப்பா கடையிலிருந்து வர நேரம் வரும்போது பால் வாங்கி சொல்லுறேன்". அது என்னமோ நா சின்ன பயன்னா இருக்கும் போதுதான் அம்மா என்ன கடைக்கு போக சொல்லி கட்டாயப்படுத்துவாங்க, இப்பெல்லாம் கேட்காமலேயே அப்பாகிட்ட சொல்லிடுவாங்க. ரெண்டு செகன்ட்லையும் பிளாஷ் பாக் வந்துட்டு போகுது!! ம்ம் !!

"எதிர் பெட்டி கடை தானே!!, நானே போறேன்!! எவ்வளவு வாங்கி வர ? காலா / அரையா?? " என்ற எனக்கு " கால் போதும் " சமையலரையிலேருந்த கூறினார்  அம்மா.
"எத்தனை ருபா மா ? என்கிட்டே ஏழு ருபாதா சில்லறை இருக்கு "
"கால் லிட்டர் ஏழு ருபாய் போதும்.. போ !!"
"கரக்டா சொல்லுமா !! அப்புறம் ஒரு ருபா ரெண்டு ருபா பத்தாம திரும்பி வர வச்சிராத!!" எவ்வளவு  ஷார்ப் நாம!!
"டிவி ஸ்டாண்ட்ல , சில்லறை இருக்கும் எடுத்துட்டு போ !!" சமையலரையிளிருந்தே குரல் கொடுத்தார் அம்மா.

கொஞ்சம் அதிகமாகவே 7 ருபாய் பத்தி யோசிச்சிட்டிருக்கோம், மனதுக்குள் நினைத்துக்கொண்டே எதிரிலுள்ள பெட்டிக்கடையை அடைந்தேன்.

"கால் லிட்டர் பால் ண்ணா" - பதிலுக்கு அவர் ஒன்றும் பேசவில்லை, பிரிட்ஜை திறந்து எடுக்க ஆரம்பித்து விட்டார்.

" எவ்வளவு ண்ணா " - இடைப்பட்ட நேரத்தில் கேட்டேன்- " எட்டு ரூபாய் " பதில் வந்தது. "அப்பாடா .. என் புத்திசாலிதனத்தை மெச்சிக் கொண்டாலும் கூடவே வந்தது விலைவாசியை பற்றிய எரிச்சல், கா... ல்ல்...  ல்ல்..லிட்டர் பால்...  எட்டு ரூபா ???  ச்சைன்னு இருந்துச்சி "

இவ்வளவும் பிரிட்ஜை திரண்டு மூடும் கணத்தில் சிந்தித்து கொண்டிருக்க,  கூடவே கடைக்காரரை நோக்கி மற்றொரு குரல் " ஒரு பில்ட்டர், ஒரு மாணிக்  சந்த்" - ஒரு சில முறை பார்த்திருக்கிறேன் அவனை, எங்க ஏரியா தான்.

காசை நீட்டினேன், வாங்காமல் கடலை மிட்டாய் பாட்டில் மேல் பாலை வைத்து விட்டு , ஒருகையில் பில்டேரையும் , மறு கையில் மாணிக்  சந்த்தையும் சர்ரென எடுத்து பாலின் அருகிலேயே வைத்தார்.

ஒரு கணம் - பாலையும், அடுத்த பாட்டில் மேல் இருந்த பில்ட்டர், பாக்கு இரண்டையும் ஒரு முறை பார்த்துவிட்டு காசு நீட்டினேன், பக்கத்திலிருந்தவனும்  அதே சமயம் காசு குடுக்க - எட்டு ருபாய் குடுத்து கால் லிட்டர் பாலை நானும் , பத்து ருபாய் குடுத்து அவனும் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டோம்.

ஒருவித  நெருடல் கேள்வியாக என்முன் வந்தது  "கால் லிட்டர் பால், எட்டு ரூபா குடுத்து வாங்க எவ்வளவு யோசனை?? குறஞ்சது மூணு பேராவது காப்பி குடிக்கலாம், மொத்தம் என்ன ஒரு 15 ரூபா செலவாகுமா ?? ஆனா இந்த நாதாரி கொஞ்சம் கூட சங்கடப் படாம ஒரு பில்ட்டர் ஒரு பாக்கு பத்து ரூபா குடுத்து வாங்கி போறானே ??? ஒரு நாளைக்கு ரெண்டு மூணாவது குடிப்பான் போல!! க்ரும்மம் நல்ல வேல நமக்கு இந்த பழக்கம் இல்ல "

விலைவாசியை காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டு விட்டிற்கு திரும்பினேன்!!


No comments:

Post a Comment