Thursday, 3 November 2011

மிரட்டும் சண்டை - வேலாயுதமா ? ஏழாம் அறிவா ?



நம்மில் நிறைய சண்டை பிரியர்கள் உண்டு; படம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இவர்களுக்கெல்லாம் சக்க போடு போடற மாதிரி சண்டை காட்சிகள் வேண்டும். இனியொரு விஷயம் மீடியா ஆதிக்கம் கொண்டுள்ள தற்போதைய சூழலில் பாடலுக்காக மீண்டும் மீண்டும் பார்க்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் குறைந்து விட்டார்கள். ஆனால் இன்றைய தேதியில் படத்தை தியேட்டரில் சென்று திரும்ப  பார்க்கும் கூட்டம் உண்டென்றால் அது சண்டை காட்சி பார்க்கும் கூட்டம் மற்றுமே!! அதனால் தான் ஆச்ஷன் படங்கள் மினிமம் கேரண்டீ படங்களாக உள்ளன.
ஒரு சூப்பர் சண்டைக்காட்சி எப்படி இருக்க வேண்டும் ??

சண்டை காட்சி அமைப்பதில் இரண்டு வகை உண்டு .. 
1  .மிக பிரமாண்டமாக காட்சி அமைப்பில் சண்டை வைப்பது.
2  .காட்சியோடு வைத்து உணர்ச்சி பூர்வமாக சண்டை வைப்பது.

பிரமாண்ட சண்டை காட்சிகள் என்றால் அன்றைக்கு விஜயகாந்த், இன்றைக்கு ஷங்கர். 

இவை இரண்டையும் விளக்குவதென்றால்:
ஒரு பீப்பாய் உருளும் காட்சியை எப்படி பிரமாண்டமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் அமைக்கலாம் என எங்கோ படித்தது..


மிகப்பெரிய மலை அருவி, டாப் ஆங்கில் வியு - ஹெலிஹாப்டர் பறக்கிறது - சீறிப்பாயும் அருவி நீரில் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்படுகிறது 10  அடி பீப்பாய்.  இது பிரமாண்டம்.

ஒரு பீப்பாய் அதன் வாய் திறக்கப் படுகிறது, ஒரு பச்சிளம் குழந்தை உள்ளே வைத்து மூடப்படுகிறது.
அடுத்த காட்சி, பீப்பாய் மாடிபடிகளிலிருந்து உருண்டோடி வருகிறது.. ஒவ்வொரு படியாக விழுந்து, கடைசி படியில் இடித்து அதன் மூடி உடைகிறது.. 
பீப்பாயின் உள்ளே கேமரா அப்படியே செல்கிறது. - இப்போ ரசிகனின் மூச்சு எப்படி இருக்கும்?? - இது உணர்ச்சி பூர்வமான காட்சி. 


இப்போ நம்ம வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு - படத்தின் சண்டை எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.

ஏழாம் அறிவு - 

மூன்று சண்டைகள் - முதல் காட்சியில் வரும் போதி தர்மர் சண்டை உணர்வுபூர்வமாக வரவேண்டிய அருமையான இடம், ஆனால் போதி தர்மரின் திறமையை காட்டவேண்டி இருந்ததாலும், குறைந்த நேரம் என்பதாலும் - மனதில் ஒட்டவில்லை 
டாங்கர் லாரி சண்டை - ரொம்ப சூப்பர் - அதிலும் இடையிடையே சூர்யா ஆச்சிரியத்தையும், இயலாமையும் ஒரு சேர காட்டி நடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனா நோக்கு வர்மம் - மம்மி ஸ்டைலில் இருந்தது பின்னடைவு, துப்பரவு தொழிலாளி சண்டை போடும் இடம், அதிர்ச்சிக்கு பதில் .. சிரிப்புதான் வந்தது .
கிளைமாக்ஸ் சண்டை - எப்ப சூர்யா திருப்பி அடிப்பார்னு இரசிகன காக்க வச்சது, முதல் அடி திருப்பி அடிக்கும் போது நம்மள அறியாமலே சொல்லுவோம் - " அடிடா அவன.. கொய்யால" - சூப்பர்  

வேலாயுதம் - 4 சண்டைகள் 

முதல் இரண்டு சண்டைகளும் - காமெடி கலந்த ஸ்டைல்;
பஞ்ச் சோட ஆரம்பிக்கும் முதல் சண்டை - சின்னதா இருந்தாலும் நைஸ்.
 
ரெண்டாவது சண்டை - காமெடி கலந்த ஸ்டைல் தான், பிற்பாதியில் ரெண்டு பெரிய சண்டை வரதால இப்படி வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். விஜய் வேலாயுதம் டிரஸ் ரீச் ஆகவேண்டிய சீன்- நல்லாவே இருந்தது.

ரயில் சண்டை - ரொம்ப ரொம்ப சூப்பரா வந்திருக்க வேண்டிய சண்டை, திருமூர்த்தி, செந்தூர பூவே  படங்கள்ல விஜயகாந்த் பண்ணியிருப்பார், அதையாவது ரபெரன்ஸ் வச்சு எடுத்திருக்கலாம்.  ரொம்ப மொக்கையவே இருந்துச்சி, அதிலும் ஹாட் பீக் ல சண்ட போட்டிடிருக்கும் போது அந்த பஞ்ச் டயலாக் சுத்தமா பொருந்தல. (சுத்தமா கேட்கல ) -பிரமாண்டம் வீணடிக்கப்பட்டது.

கிளைமாக்ஸ் சண்டை - விஜய கட்டி போட்டுட்டு, தங்கச்சி குரல் கேட்டதும் உணர்ச்சி பொங்கறது ரொம்ப சூப்பரா மேட்ச் ஆகியிருந்தது, முந்தன சீன்ல தங்கச்சிக்கு வெடிகுண்டு வச்சவன முறைச்சு பாத்து, அடிச்சு கொல்லுற சீன் சூப்பர். (நல்ல வேல இங்க பஞ்ச் வைக்கல). விஜய் வெத்து உடம்போட நின்னாலும், பிரமாண்டத்துக்கு மேல் உணர்ச்சி பூர்வமாகவே இருந்தது பிளஸ்.

சண்டைக்கு என்னோட சாய்ஸ் - "ஏழாம் அறிவு "









No comments:

Post a Comment