சில இயக்குனர்களின் அறிமுக படங்கள் தாம் தூம் என வெற்றி பெரும், அவர்களின் அடத்தடுத்த படங்களும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவரும். ஆனால் கிடைத்த வெற்றியை தக்கவைத்து தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருப்பவர்கள் ஒரு சிலரே..
ஒரு சில வெற்றிகளுடன் சரக்கு தீர்த்து விட்ட சில இயக்குனர்கள் பற்றி காண்போம் :
1 . சேரன் - இந்த வரிசையில் நான் முதலாவதாக வைக்க ஆசைப்படும் இயக்குனர். இவரின் கடைசி வெற்றிப்படம் ஆட்டோக்ராப்; அந்த படம் வெளி வந்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று என்றே மறந்து விட்டது. ஏனோ இன்னும் இவர் முன்னணி இயக்குனர் பட்டியலில் உள்ளார் ?? இவர் நடிப்புப் பற்றி சொல்ல வேண்டுமே... யப்பா .. நண்பர் ஒருவர் சொன்னார் இப்படி," சிவாஜி சில படங்களில் OVER ACTING செய்திருப்பார்..ஆனால் இந்த சேரன் யதார்த்தமாக நடிகிறேன்ன்னு என்னமோ பண்ணரார்ப்பா.. எனக்கு அது என்ன ஆக்டிங் ன்னு சொல்ல தெரில "..
2 . S J சூர்யா - வாலி, குஷி ன்னு அஜித் விஜய் வைச்சு சூப்பர் ஹிட் குடுத்தவர்.. அப்புறம் அவரே அவர் இயக்கத்துல நடிச்சி அ.. ஆ .. ன்னு அவருக்கு அவரே ஆப்பு வச்சுக்கிட்டார்.. இப்போ நண்பன் ல நடிக்கிறாராமா... இயக்கம் மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்.
3 . பேரரசு - விஜயின் ஆஸ்த்தான இயக்குனராக இருந்தார்.. இவர் இருந்த பீக்க பார்த்து தமிழ்நாட்டுல இருக்குற ஊர் பத்தாது, ஆந்திரா - கேரளா ஊர் பேர்களைஎல்லாம் வச்சு படம் எடுப்பார் ன்னு நினச்சாங்க .. இப்போ காலி டப்பா.
4 . ரமணா - திருமலை படம் முலம் தளபதிக்கே திருப்பம் தந்தவர். சுள்ளான் ன்னு ஒரு படம் டைரக்ட் பண்ணி காணாமல் போனவர்.
5 . மகாராஜன் - விஜயகாந்த் மார்க்கெட் டல் அடிச்சிட்டு இருந்த நேரம் வல்லரசுன்னு ஹிட் படம் குடுத்து விஜயகாந்த் - வானத்த போல , வாஞ்சிநாதன், வல்லரசுன்னு - வ வரிசை ஹாட் ட்ரிக் அடிக்க வச்சார்.. ஆனா அடுத்து அஜித் படம் ஒண்ணு டைரக்ட் பண்ணார்.. ஆஞ்சநேயா ன்னு நினைக்கிறன் - ஆளு அவுட்.
6 . எழில் - துள்ளாத மனமும் துள்ளும் என்ற சூப்பர் டுப்பர் ஹிட் குடுத்தவர் , அதை அடுத்து அஜித் வைத்து ஒரு நார்மல் படம் .. ஒரு மொக்க படம் ..
7 . சுப்ரமணிய சிவா - திருடா திருடி
8 . கொஞ்சம் பழைய லிஸ்ட் இல் - வசந்த் மற்றும் கதிர்
மதில் மேல் பூனை போல் இருப்பவர்கள் - கொஞ்சம் அசந்தாலும் காலி பெருங்காய டப்பா லிஸ்ட் -இல் சேர வாய்ப்புள்ள இயக்குனர்கள் :
1 . மிக்ஷின்
2 . லிங்கு சாமி
3 . தரணி
இப்பவும் எப்பவும் நம்பிக்கை உள்ள இயக்குனர்கள்:
1 மணி ரத்னம்
2 ஷங்கர்
3 A R முருகதாஸ்
4 கௌதம் வாசுதேவ்
5 பாலா
6 அமீர்
வெற்றிமாறன் , வெங்கட் பிரபு, KV ஆனந்த் - தனி லிஸ்ட் ; இவங்களோட வெரைட்டி இவங்களுக்கு தனி இடம் குடுக்க சொல்லுது..
தலைப்புக்கு பதில் - A R முருகதாஸ் சரக்கு இன்னும் அப்படியே உள்ளது, அவர் மீண்டு வருவார் , தளபதியுடன் கூடும் படம் கண்டிப்பாக வெற்றிப் பெரும்.
Arokara Arogara :)
ReplyDelete